முனைவர் ராஜ.கார்த்திக்



முனைவர் ராஜ.கார்த்திக் 

தமிழ்ப் பேராசிரியர் கோவை.

 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரிக்கு அருகில் உள்ள கூக்கல்துறை என்னும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர், '''முனைவர் ராஜ.கார்த்திக்'''.



பள்ளிக் கல்வியை தம் கிராமத்திலும் இளங்கலைப் பட்டப் படிப்பை ஊட்டி அரசு கலைக் கல்லூரியிலும் முதுகலைப் பட்டத்தை, பொள்ளாச்சியிலும் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தை, கோவை அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி)யிலும் பயின்றவர்.'''சங்க இலக்கியத்தில் தமிழ்த் தேசியக் கோட்பாடுகள்''' எனும் தலைப்பில்  முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.



கவிஞர், பேச்சாளர், சிறுகதைப் படைப்பாளர். மரபுக்

கவிதைகள், புதுக்கவிதைகள் துளிப்பா (ஹைக்கூ) எழுதும் கவிஞர் என பன்முகத் தன்மை கொண்ட படைப்பாளி.




இவரது கவிதை நூல்கள் 

                             நிலவுக்குக் கீழே ஆகாயம்,

                             இன்னொரு காந்தி.


தற்போது கோவையில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். 

பட்டிமன்றப் பேச்சாளர். 

தமிழை உலக மக்கள் அனைவரும் கற்று மேன்மையுற வேண்டும் என்பதற்காக, பன்னாட்டு மக்களுக்கும் அவர்தம் குழந்தைகளுக்கும் தமிழ் கற்பித்து வருகிறார். இணையத்தின் வழியாகவும் அலைபேசி வழியாகவும் இம்முயற்சி மேற்கொண்டுள்ளார். 



இவரது தமிழ்ப்பணிக்காக மதுரைக் காமராசர் பல்கலைக்கழகமும் மலேசியத் தமிழ் மன்றமும் இணைந்து '''இளம் சிந்தனையாளர்''' என்ற விருதினை

இவருக்கு வழங்கியுள்ளன.

'''பொன்னான ஆசிரியர் விருது''' 2017,

குருகுலத் தென்றல் வழங்கிய '''இளங்கவிஞர் விருது''' 2001 ஆகியவை இவர் பெற்ற பிற விருதுகள் ஆகும்.


விக்கிமூலம் 

(விக்கிப்பீடியா)மின்னூல்கள் திருத்தம் செய்யும் பணி:


இந்திய மொழிகளுக்கு இடையே நடைபெற்ற மெய்ப்புப் போட்டியில் தமிழ் முதலிடம் பிடிக்க உழைத்த 155 தமிழர்ப் படையில் இவரும் பங்கேற்று தம் மாணவர்களுடன் '''தமிழை அரியணை''' ஏற்ற உழைத்துள்ளார்.

இதற்காக இவர் பணிபுரியும் கல்லூரியில் ஆசிரியர்கள், மாணவர்கள் கொண்ட, கணினித் தமிழ்ச் சங்கத்தை ஏற்படுத்தி அதன்  ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி வருகிறார். தமிழ்க் கலைக் கழகத்தினருடன் இணைந்து விக்கிமூலம் நூல்கள் திருத்தம் பணியில் ஈடுபட்டு, பல மாவட்டங்களில் உள்ள ஆர்வலர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார். 



கல்வெட்டுப் பயிற்சி

சங்கப் பலகை எனும் அமைப்பை நிறுவி, சங்க காலத்தில் எழுத்து வழக்கில் பின்பற்றப்பட்ட தமிழ்ப் பிராமி எழுத்துமுறைப் பயிற்சியை, நாள்தோறும் வாட்ஸ் அப் வழியாக வழங்கி வருகிறார்.

தமிழ் இலக்கணப் பயிற்சி:

தமிழ் இலக்கணப் பயிற்சியை, மாணவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கி வருகிறார்.

தொடர்புக்கு

9842958499 

9750143631


Comments

Popular posts from this blog

புதுக்கவிதை வரலாறு

தலைமை தாங்கும் தமிழ் - உவமைக் கவிஞர் சுரதா

லளழ வேறுபாடுகள்