Posts

Showing posts from December, 2021

புதுக்கவிதை வரலாறு

  புதுக்கவிதை யின் வரலாறு  புதுக்கவிதை :  கவிதை எனப்படுவது சொற்களில் உணர்ச்சியும், கற்பனையும் கொண்டு இயற்றப்படுவதாகும். இதில் உணர்ச்சிகள் நயமாக காட்டப்படும். கவிதை இரு வகைப்படும். மரபுக் கவிதை மற்றொன்று புதுக்கவிதையாகும். புதுக்கவிதை என்பது மரபுக்கவிதையைவிட ஒரு சில கூறுகளில் மாறுப்பட்டதாகும். இவ்வளவு அடிகளில் தான் பாட வேண்டும் என்ற கட்டுப்பாடு புதுக்கவிதைக்கு இல்லை. இந்தப் பா வகையில் தான் பாட வேண்டும் என்ற மரபும் இல்லை. எதையும் எவ்வளவு அடியிலும் எவரும் பாடலாம் என்பதே புதுக்கவிதயின் தனிச்சிறப்பாகும். எனவே தான், இலக்கணச் செங்கோல் யாப்புச் சிம்மாசனம் எதுகைப் பல்லக்கு மோனைத் தேர்கள் தனிமொழிச் சேனை பண்டித பவனி இவையெதுவும் இல்லாத கருத்துக்கள் தம்மைத்தாமே ஆளக் கற்றுக்கொண்ட புதிய மக்களாட்சி முறையே புதுக்கவிதை (ஊர்வலம்)                             என்று, புதுக்கவிதைக்கு இலக்கணமாக மு.மேத்தா கூறுகிறார்.  புதுக்கவிதை படிப்பதற்கு எளிமையாக இருக்கும். அதனையடுத்து, புதுமையுடன் வாசகர்களுக்குப் புரிய வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டிருக்கும். புதுக்கவிதையைப் படிக்கும் பொழுது பெரும

சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்

 சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் -  முனைவர்.ராஜ.கார்த்திக்       சிறுகதையின் தோற்றம் காலம் காலமாகக் கதை சொல்வதும், கதை கேட்பதும்எல்லாத்  தேசங்களிலும், எல்லா மக்களிடையேயும்வாய்மொழி மரபாக  இருந்துவந்திருக்கிறது. நாகரிகம்தோன்றுவதற்கு முன்பே, மக்கள் இனக் குழுக்களாக இயங்கிவந்த  போது, ஓய்வு நேரங்களில் சக மனிதர்களிடம் தொடர்புகொள்வதற்கும்,  குடும்ப உறவினர்களுடன் பொழுதைக்கழிக்கவும் கதை கூறும்  மரபைக் கையாண்டு வந்துள்ளனர்.கதை கூறுபவர் தன்னுடைய  கற்பனை வளத்தாலும்,அனுபவத்தின் பயனாலும், தான்  கண்டதையும் கேட்டதையும்விரித்துச் சொல்லி, கேட்போரின் பொழுது  போக்கிற்குத்துணை நின்றனர்.   ‘ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு ராஜாவாம்’என்று சுவாரஸ்ய உணர்வோடு  கதை தொடங்கும் மரபும்நம்மிடையே இருந்துள்ளது. பொய்ம்மொழி,  பொய்க்கதை,புனைகதை, கட்டுக்கதை, பழங்கதை என்றெல்லாம்  கதைகள்அக்காலத்தில் சுட்டப்பட்டுள்ளன. குடும்பங்களில்  சிறுகுழந்தைகளுக்குப் ‘பாட்டி கதை’ சொல்லும் மரபு உண்டு. அம்மரபு போன தலைமுறை வரை தமிழ் மண்ணில் இருந்துவந்துள்ளது. பின்பு ‘எழுத்து மரபு’ ஏற்பட்ட போது, கதைகள் பெரியஎழுத்துக்  கதைகளாக எழுதப்பட்டன. பின்னர், அச்

எழுத்துக்களின் பிறப்பு

 எழுத்துகளின் பிறப்பு தமிழ் எழுத்துகளின் வகைகள் பற்றியும் அதன் தொகை பற்றியெல்லாம் அறிந்துகொண்ட நாம், அடுத்து எழுத்துகள் எவ்வாறு எங்குப் பிறக்கின்றன என்பதையும் அறிந்துகொள்ளுதல் வேண்டியது அவசியமானதாகும். எழுத்துகள் பிறப்பதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பவை ஒலியணுக்கள்.  உயிர் தங்கியுள்ள உடம்பின் உள்ளே எழுகின்ற காற்றானது, மார்பு, கழுத்து, தலை, மூக்கு ஆகிய இடங்களில் தங்கி, உதடு, நாக்கு, பல், மேல்வாய் ஆகிய இவ்வுறுப்புகளின் முயற்சியால் வெவ்வேறு ஒலிகளாகப் பிறக்கின்றன. எழுத்துகளின் பிறப்பை இடப்பிறப்பு, முயற்சிப் பிறப்பு என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இடப்பிறப்பு எழுத்துகள் தோன்றுகின்ற மார்பு, கழுத்து, தலை, மூக்கு முதலானவற்றை இடப்பிறப்பு எனவும்  முயற்சிப் பிறப்பு உதடு, நாக்கு, பல், மேல்வாய்(அண்ணம்) முதலான உறுப்புகளின் தொழில் வேறுபாட்டினால் ஒலிப்பதனை முயற்சிப் பிறப்பு எனவும் வழங்குவர். மெய்யெழுத்துகளை ஒலிக்கும்பொழுது வேறுபட்ட மூன்று ஒலிகளை நாம் கேட்கலாம்.  அவை வல்லின ஒலி, மெல்லின ஒலி, இடையின ஒலி என்பன. அவ்வொலிகள் வேறுபடுவதற்குக் காரணம், அவை பிறக்கும் இடங்கள் வேறுபடுவனவேயாகும். எழுத்துகளின் இடப்பி

வினா விடை வகைகள்

வினா என்பது  ஒன்றைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டி. ஒருவர் இன்னொருவரை வினவுதல் வினா எனப்படும்.  வினா வகை அவ்வினா ஆறு வகைப்படும். அறி வினா, அறியா வினா, ஐய வினா, கொளல் வினா, கொடை வினா,ஏவல் வினா என வினா ஆறுவகைப்படும்.  1.அறிவினா ஒரு வினாவிற்குரிய விடையைத் தமக்குத் தெரிந்திருந்தும், அவ்வினாவிற்குரிய விடையைப் பிறரும் அறிந்துளரா என அறியும் பொருட்டு வினவும் வினா அறி வினா ஆகும்.      ஆசிரியர் தம் மாணவரிடம் இச்செயுளுக்குப் பொருள் யாது என வினவுதல். ஆசிரியர் தம் மாணவரிடம் திருக்குறளை இயற்றியவர் யார் ? எனக் கேட்டல். 2.அறியா வினா தாம் அறியா ஒன்றை, அறிந்துகொள்ளவேண்டி, அதனை அறிந்தாரிடம் வினவுதல் அறியா வினா எனப்படும். 3.ஐய வினா  தனக்கு ஏற்பட்ட ஐயத்தைக் (சந்தேகம்) தீர்த்துக் கொள்வதற்குக் கேட்கப்படும் வினா - ஐய வினா (எ.கா.) தூரத்தில் வருவது எருதோ? பசுவோ?  4.கொளல் வினா  ஏதேனும் ஒன்றைப் பெற்றுக் கொள்ளும்பொருட்டு, கேட்கும் வினா கொளல் வினா எனப்படும். எ.கா:     மளிகைக்கடைக்காரரிடம் வணிகரே! சர்க்கரை உள்ளதோ? என வினவுவது. 5.கொடை வினா  தம்மிடம் உள்ள ஒன்றைப் பிறருக்குக் கொடுக்கக் கருதி கேட்கும் வினா. அரசன், புலவரிடம

மஞ்சள் நிற ரிப்பன் சிறுகதை

அலகு - 3  சிறுகதை மஞ்சள் நிற ரிப்பன்   - ஏகாதசி ( இயக்குநர்)  சுத்துப்பட்டிகளுக்கும் செக்கானூரணி குட்டி நகரம். முகப்பு முழுக்க கடைகள்தான். வீடுகள் குறைவு. இங்கே பால் பன்னும், காராசேவும் ஃபேமஸ். நடமாடும் ஆட்களைவிட கசாப்புக் கடைகளில் தொங்கிக்கொண்டிருக்கும் ஆடுகளின் எண்ணிக்கை அதிகம். இன்று திங்கட்கிழமை. காய்கறிச் சந்தை.  பொழுது சாயும் நேரமாதலால் ஊர் மஞ்சள் குளித்திருந்தது. தனமும் அவளது நாத்தனாரும் சந்தைக்கு வந்திருந்தனர்.  கருவாடு, வெங்காயம், பச்சை மிளகாய், உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், வெண்டைக்காய், மாங்காய், தேங்காய், மொச்சைக்காய் என சகல காய்கறிகளையும் வியாபாரிகள் பெரும் குவியலாகக் குவித்திருந்தனர். தரமானவற்றை கிலோ கணக்கிலும் மட்டமானவற்றைக் கூறுகட்டியும் விற்றுக் கொண்டிருந்தனர். பொருட்கள் வாங்க வந்தோரை, கையைப் பிடித்து இழுக்காக் குறையாக வியாபாரிகள் தத்தம் கடைக்குக் கத்திக் கத்தி அழைத்தனர். சனம் செம்மறி ஆடுகள் போன்று மொதுமொதுவெனப் போவதும் வருவதுமாக இருந்தது. தனத்தின் நாத்தனார் உருளைக்கிழங்கையும் பீன்ஸையம் வாங்கி கட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டிருந்தாள். தனத்தின் அப்பன் வீட்டு ஊர் கலுங்கு

வாடகை வீடு சிறுகதை

 ( முனைவர் ராஜ.கார்த்திக், தமிழ்த்துறை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி, கோவை). வாடகை வீடு கதையாசிரியர்: தமிழ்நதி கதைத்தொகுப்பு: குடும்பம் கதைப்பதிவு: December 7, 2012 பார்வையிட்டோர்: 9,121 வெயில் மண்டையைப் பிளந்து உள்ளே இறங்கிவிடுவேன் என்பதுபோல ஆங்காரத்தோடு எரித்தது. பேருந்தில் இருந்து இறங்கி, அகண்ட கரும் பாம்பாகக்கிடந்த வீதியைக் கடக்கும்போது, உயிர் ஒரு நிமிடம் உதறல் எடுத்து ஓய்ந்தது. நல்லவேளை, கதிர் அவளது கையைப் பற்றி இருந்தான். பிரதான வீதியில் இருந்து அந்த அபார்ட்மென்ட் இருக்கும் சிறு வீதியினுள் இறங்கியதுமே ஆசுவாசமாக உணர்ந்தார்கள். அதற்கு, சாலையின் இருமருங்கில் இருந்தும் கிளைக் கைகளை நீட்டி ஒன்றையன்று பற்ற முயன்றுகொண்டு இருந்த மரங்கள் காரணமாக இருக்கலாம். ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்துவிட்டு திடீரென நினைத்துக்கொண்டாற்போலக் காற்று இலைகளை விசிறியது. வெயிலில் வந்த களைப்பை, காற்றின் தடவல் துடைத்துப்போட்டது. இத்தனை அலைச்சலுக்குப் பிறகு ஒருவழியாக நல்லதொரு வீடு கிடைக்கவிருக்கும் நிம்மதி கதிரின் முகத்தில். வீடு தேடி அலைந்த இந்த மூன்று வாரங்களில் அவன் மேலும் இளைத்துவிட்டதுபோல் இருந்தது சுமதிக்க

காபூல் காரன் - தாகூர் சிறுகதை

காபூல்காரன்                                                              - ரவீந்திரநாத் தாகூர்  பெண் மினிக்கு ஐந்தாண்டு நிரம்பிய என்னுடைய சிறிய பெண் கணமேனும் வாய் ஓய்ந்து இராது. இவ்வுலகில் பிறந்ததும் அவன் கற்றுக்கொள்வதற்கு ஓராண்டு கழிந்திருக்கும். அதன்பிறகு விழிக்க கொண்டிருக்கும் நேரத்தின் ஒரு சிறு பகுதியைக்கூட அவள் வாளாவிரு வீணாக்கியதில்லை. அவளுடைய தாய் பலமுறை அதட்டி அவர் வாயைப் பொத்துவாள். ஆனால், இதைச் செய்ய என்னால் அதன் மினி வாய் திறவாமல் இருப்பதைப் பார்க்க எனக்கு இருப்புக் கொள்ளாது இந்தச் சலுகையினால் அவள் என்னுடன் சற்று உற்சாகத்துடனேயே உரையாடி மகிழ்வாள்.  ஒரு நாள் காலை, நான் என்னுடைய புதிய நவீனத்தின் பதினேழாம் அத்தியாயத்தை எழுதத் தொடங்கியபொழுது மினி வந்து பேச்சுக் கொடுத்தாள் : "அப்பா, அந்த வேலைக்காரன் இருக்கிறானே, ராம்தயால் காக்கையை கவ்வா' என்கிறான். அவனுக்கு ஒன்றுமே தெரியவில்லையே!  இந்த உலகில் உள்ள மொழிகள் வெவ்வேறானவை என்பதைக் குறித்து அவளுக்கு நான் விளக்கம் கூறுவதற்கு முன்னரே மினி ஒரு புது விஷயத்தை எடுத்துவிட்டாள் : "அப்பா, போலா சொல்கிறான் (வானத்திலே) யானையெல்லாம்