Posts

தலைமை தாங்கும் தமிழ் - உவமைக் கவிஞர் சுரதா

தலைமை தாங்கும் தமிழ் முன்னுரை : சுரதா (23, நவம்பர் 1921 – 20 சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால்‌ பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்தின தாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர். இவர் இயற்றிய தலைமை தாங்கும் தமிழ் என்ற கவிதை குறித்து இங்கு காண்போம். உலகத்தின் தலைமை மொழி: படுத்திருக்கும் வினாக்குறிப்போல் மீசை வைத்த பாண்டியர்கள் வளர்த்த மொழி கடலின் நீரை உடுத்திருக்கும் உலகத்தில் தலைமை தாங்கும் உயர்ந்த மொழி என்று தமிழ் மொழியை உயர்வாகப் பாடுகிறார் உவமைக் கவிஞர் சுரதா. மூவேந்தர்களில் முதல் வேந்தராகியப் பாண்டியர்கள் வீரத்தில் சிறந்தவர்கள். வீரத்தின் அடையாளமாக தங்கள் முகத்தில் அவர்கள் வைத்திருக்கும் மீசை ஒரு வினாக்குறி படுத்திருப்பது போல இருக்கும் என்று தனக்கே உரிய உவமைக்

லளழ வேறுபாடுகள்

விலை - பொருளின் மதிப்பு விளை - உண்டாக்குதல் விழை - விரும்பு இலை - செடியின் இலை இளை - மெலிந்து போதல் இழை - நூல் இழை ஒலி - சப்தம் ஒளி - வெளிச்சம் ஒழி - நீக்கு கலி- துன்பம் களி - மகிழ்ச்சி கழி - தடி வலி - துன்பம், வேதனை வளி - காற்று வழி - பாதை தலை- உறுப்பு தளை - கட்டு தழை -

ர ற வேறுபாடு

ஏரி - குளம் ஏறி - மேலே ஏறி கூரை - வீட்டின் கூரை கூறை - புடவை அரம் - கருவி அறம் - தர்மம் அரி - நறுக்கு அறி - தெரிந்து கொள் அரை- பாதி அறை - வீட்டின் பகுதி ஆர- நிரம்ப ஆற - சூடு தணிய  இரத்தல் - யாசித்தல் இறத்தல்-சாதல் இரை- உணவு இறை - இறைவன் உரல்- இடிக்கும் உரல் உறல்- பொருந்துதல் உரை - பேச்சு உறை- மூடி எரி - தீ எறி - வீசு கரி - அடுப்புக் கரி, யானை  கறி - காய்கறி கரை- ஏரிக்கரை கறை - அழுக்கு குரைத்தல் - நாய் குரைத்தல்  குறைத்தல் - சுருக்குதல் செரித்தல் - சீரணமாதல் செறித்தல் - திணித்தல் தரி - அணிந்து கொள் தறி-வெட்டு

வல்லினம் மிகா இடங்கள்

வல்லெழுத்து மிகா இடங்கள் அது, இது, எது என்னும் சொற்களின் பின் வலி மிகாது. எ.கா: அது காண்  எது செய்தாய் இது பார். ஏது, யாது என்னும் சொற்களின் பின் வலி மிகாது. எ.கா: ஏது கண்டாய் யாது பொருள். அவை, எவை, இவை, யாவை என்ற சொற்களின் பின் வலி மிகாது. அவை பெரியன யாவை போயின அத்தனை, எத்தனை, இத்தனை அத்தனை செடி எத்தனை பசு வெண்டை, சுண்டை என்று அத்தனைச் செடிகள். எத்தனைப் பசு. அவ்வளவு, எவ்வளவு, இவ்வளவு என்ற சொற்களின் பின் வலி மிகாது. அவ்வளவு தந்தாய் எவ்வளவு செய்தாய் இவ்வளவு துணிவு. அங்கு, எங்கு, இங்கு என்னும் சொற்களின் பின் (இஃது எழுவாய்த்தொடர் ஆகையால் மிகாமலும், குற்றியலுகரச் சுட்டு ஆதலின் மிக்கும் வரும்) எ.கா: அங்கு செல் எங்கு கற்றாய் இங்கு பார் சில மென்றொடர்க் குற்றியலுகரத்திற்குப்பின் தொகு அன்று சொன்னான் சேட பட்டி என்று தந்தான் இன்று கண்டான் மென்று தின்றார் வந்து சேர்ந்தான் சில வினையெச்ச விகுதிக்குப்பின் நடந்து சென்றான்  தந்து போனான் சென்று திரும்பினான்

வல்லினம் மிகும் இடங்கள்

வல்லெழுத்து மிகுமிடங்கள் - 1. அ, இ, உ என்னும் சுட்டெழுத்துகளின் பின்னும் 'எ' என்னும் வினாவெழுத்தின் பின்னும் வரும் வல்லினம் மிகும். தொகு அ+கனி = அக்கனி, இ+பையன் = இப்பையன், எ+சிறுவன் = எச்சிறுவன்? 2. 2. அந்த, இந்த, எந்த என்னும் சுட்டு, வினாத் திரிபுகளின் பின் வரும் வல்லினம் மிகும். அந்த + கனி = அந்தக் கனி, இந்த + பையன் = இந்தப் பையன், எந்த + குதிரை = எந்தக் குதிரை?. 3. 3. அப்படி, இப்படி, எப்படி என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும். அப்படிக் கற்றான், இப்படிச் சொன்னான், எப்படித் தருவான்.  4. அங்கு, இங்கு, எங்கு என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும். அங்குக் கண்டான், இங்குப் பெற்றான். எங்குச் சென்றனை இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும். எ.கா: மயிலைக் கண்டேன்‌. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின்பின் வரும் வல்லினம் மிகும். ஓடாக்குதிரை. பண்புத்தொகையில் வல்லினம் மிகும். தொகு இனிப்புப் பண்டம். இரு பெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும். ஆவணித் திங்கள். அரை, பாதி, எட்டு, பத்து என்னும் எண்ணுப் பெயர்ச்சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும். தொகு அரைக்காசு, பாதிப்ப

புதுக்கவிதை வரலாறு

  புதுக்கவிதை யின் வரலாறு  புதுக்கவிதை :  கவிதை எனப்படுவது சொற்களில் உணர்ச்சியும், கற்பனையும் கொண்டு இயற்றப்படுவதாகும். இதில் உணர்ச்சிகள் நயமாக காட்டப்படும். கவிதை இரு வகைப்படும். மரபுக் கவிதை மற்றொன்று புதுக்கவிதையாகும். புதுக்கவிதை என்பது மரபுக்கவிதையைவிட ஒரு சில கூறுகளில் மாறுப்பட்டதாகும். இவ்வளவு அடிகளில் தான் பாட வேண்டும் என்ற கட்டுப்பாடு புதுக்கவிதைக்கு இல்லை. இந்தப் பா வகையில் தான் பாட வேண்டும் என்ற மரபும் இல்லை. எதையும் எவ்வளவு அடியிலும் எவரும் பாடலாம் என்பதே புதுக்கவிதயின் தனிச்சிறப்பாகும். எனவே தான், இலக்கணச் செங்கோல் யாப்புச் சிம்மாசனம் எதுகைப் பல்லக்கு மோனைத் தேர்கள் தனிமொழிச் சேனை பண்டித பவனி இவையெதுவும் இல்லாத கருத்துக்கள் தம்மைத்தாமே ஆளக் கற்றுக்கொண்ட புதிய மக்களாட்சி முறையே புதுக்கவிதை (ஊர்வலம்)                             என்று, புதுக்கவிதைக்கு இலக்கணமாக மு.மேத்தா கூறுகிறார்.  புதுக்கவிதை படிப்பதற்கு எளிமையாக இருக்கும். அதனையடுத்து, புதுமையுடன் வாசகர்களுக்குப் புரிய வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டிருக்கும். புதுக்கவிதையைப் படிக்கும் பொழுது பெரும

சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்

 சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் -  முனைவர்.ராஜ.கார்த்திக்       சிறுகதையின் தோற்றம் காலம் காலமாகக் கதை சொல்வதும், கதை கேட்பதும்எல்லாத்  தேசங்களிலும், எல்லா மக்களிடையேயும்வாய்மொழி மரபாக  இருந்துவந்திருக்கிறது. நாகரிகம்தோன்றுவதற்கு முன்பே, மக்கள் இனக் குழுக்களாக இயங்கிவந்த  போது, ஓய்வு நேரங்களில் சக மனிதர்களிடம் தொடர்புகொள்வதற்கும்,  குடும்ப உறவினர்களுடன் பொழுதைக்கழிக்கவும் கதை கூறும்  மரபைக் கையாண்டு வந்துள்ளனர்.கதை கூறுபவர் தன்னுடைய  கற்பனை வளத்தாலும்,அனுபவத்தின் பயனாலும், தான்  கண்டதையும் கேட்டதையும்விரித்துச் சொல்லி, கேட்போரின் பொழுது  போக்கிற்குத்துணை நின்றனர்.   ‘ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு ராஜாவாம்’என்று சுவாரஸ்ய உணர்வோடு  கதை தொடங்கும் மரபும்நம்மிடையே இருந்துள்ளது. பொய்ம்மொழி,  பொய்க்கதை,புனைகதை, கட்டுக்கதை, பழங்கதை என்றெல்லாம்  கதைகள்அக்காலத்தில் சுட்டப்பட்டுள்ளன. குடும்பங்களில்  சிறுகுழந்தைகளுக்குப் ‘பாட்டி கதை’ சொல்லும் மரபு உண்டு. அம்மரபு போன தலைமுறை வரை தமிழ் மண்ணில் இருந்துவந்துள்ளது. பின்பு ‘எழுத்து மரபு’ ஏற்பட்ட போது, கதைகள் பெரியஎழுத்துக்  கதைகளாக எழுதப்பட்டன. பின்னர், அச்