Posts

Showing posts from September, 2022

வல்லினம் மிகா இடங்கள்

வல்லெழுத்து மிகா இடங்கள் அது, இது, எது என்னும் சொற்களின் பின் வலி மிகாது. எ.கா: அது காண்  எது செய்தாய் இது பார். ஏது, யாது என்னும் சொற்களின் பின் வலி மிகாது. எ.கா: ஏது கண்டாய் யாது பொருள். அவை, எவை, இவை, யாவை என்ற சொற்களின் பின் வலி மிகாது. அவை பெரியன யாவை போயின அத்தனை, எத்தனை, இத்தனை அத்தனை செடி எத்தனை பசு வெண்டை, சுண்டை என்று அத்தனைச் செடிகள். எத்தனைப் பசு. அவ்வளவு, எவ்வளவு, இவ்வளவு என்ற சொற்களின் பின் வலி மிகாது. அவ்வளவு தந்தாய் எவ்வளவு செய்தாய் இவ்வளவு துணிவு. அங்கு, எங்கு, இங்கு என்னும் சொற்களின் பின் (இஃது எழுவாய்த்தொடர் ஆகையால் மிகாமலும், குற்றியலுகரச் சுட்டு ஆதலின் மிக்கும் வரும்) எ.கா: அங்கு செல் எங்கு கற்றாய் இங்கு பார் சில மென்றொடர்க் குற்றியலுகரத்திற்குப்பின் தொகு அன்று சொன்னான் சேட பட்டி என்று தந்தான் இன்று கண்டான் மென்று தின்றார் வந்து சேர்ந்தான் சில வினையெச்ச விகுதிக்குப்பின் நடந்து சென்றான்  தந்து போனான் சென்று திரும்பினான்

வல்லினம் மிகும் இடங்கள்

வல்லெழுத்து மிகுமிடங்கள் - 1. அ, இ, உ என்னும் சுட்டெழுத்துகளின் பின்னும் 'எ' என்னும் வினாவெழுத்தின் பின்னும் வரும் வல்லினம் மிகும். தொகு அ+கனி = அக்கனி, இ+பையன் = இப்பையன், எ+சிறுவன் = எச்சிறுவன்? 2. 2. அந்த, இந்த, எந்த என்னும் சுட்டு, வினாத் திரிபுகளின் பின் வரும் வல்லினம் மிகும். அந்த + கனி = அந்தக் கனி, இந்த + பையன் = இந்தப் பையன், எந்த + குதிரை = எந்தக் குதிரை?. 3. 3. அப்படி, இப்படி, எப்படி என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும். அப்படிக் கற்றான், இப்படிச் சொன்னான், எப்படித் தருவான்.  4. அங்கு, இங்கு, எங்கு என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும். அங்குக் கண்டான், இங்குப் பெற்றான். எங்குச் சென்றனை இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும். எ.கா: மயிலைக் கண்டேன்‌. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின்பின் வரும் வல்லினம் மிகும். ஓடாக்குதிரை. பண்புத்தொகையில் வல்லினம் மிகும். தொகு இனிப்புப் பண்டம். இரு பெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும். ஆவணித் திங்கள். அரை, பாதி, எட்டு, பத்து என்னும் எண்ணுப் பெயர்ச்சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும். தொகு அரைக்காசு, பாதிப்ப