Posts

Showing posts from August, 2023

தலைமை தாங்கும் தமிழ் - உவமைக் கவிஞர் சுரதா

தலைமை தாங்கும் தமிழ் முன்னுரை : சுரதா (23, நவம்பர் 1921 – 20 சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால்‌ பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்தின தாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர். இவர் இயற்றிய தலைமை தாங்கும் தமிழ் என்ற கவிதை குறித்து இங்கு காண்போம். உலகத்தின் தலைமை மொழி: படுத்திருக்கும் வினாக்குறிப்போல் மீசை வைத்த பாண்டியர்கள் வளர்த்த மொழி கடலின் நீரை உடுத்திருக்கும் உலகத்தில் தலைமை தாங்கும் உயர்ந்த மொழி என்று தமிழ் மொழியை உயர்வாகப் பாடுகிறார் உவமைக் கவிஞர் சுரதா. மூவேந்தர்களில் முதல் வேந்தராகியப் பாண்டியர்கள் வீரத்தில் சிறந்தவர்கள். வீரத்தின் அடையாளமாக தங்கள் முகத்தில் அவர்கள் வைத்திருக்கும் மீசை ஒரு வினாக்குறி படுத்திருப்பது போல இருக்கும் என்று தனக்கே உரிய உவமைக்