வல்லினம் மிகும் இடங்கள்

வல்லெழுத்து மிகுமிடங்கள்
-
1. அ, இ, உ என்னும் சுட்டெழுத்துகளின் பின்னும் 'எ' என்னும் வினாவெழுத்தின் பின்னும் வரும் வல்லினம் மிகும்.
தொகு
அ+கனி = அக்கனி,

இ+பையன் = இப்பையன்,

எ+சிறுவன் = எச்சிறுவன்? 2.

2. அந்த, இந்த, எந்த என்னும் சுட்டு, வினாத் திரிபுகளின் பின் வரும் வல்லினம் மிகும்.

அந்த + கனி = அந்தக் கனி,

இந்த + பையன் = இந்தப் பையன்,

எந்த + குதிரை = எந்தக் குதிரை?. 3.

3. அப்படி, இப்படி, எப்படி என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும்.

அப்படிக் கற்றான்,

இப்படிச் சொன்னான்,

எப்படித் தருவான். 

4. அங்கு, இங்கு, எங்கு என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும்.

அங்குக் கண்டான்,

இங்குப் பெற்றான். எங்குச் சென்றனை

இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்.
எ.கா:
மயிலைக் கண்டேன்‌.

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின்பின் வரும் வல்லினம் மிகும்.
ஓடாக்குதிரை.

பண்புத்தொகையில் வல்லினம் மிகும்.
தொகு
இனிப்புப் பண்டம்.

இரு பெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும்.
ஆவணித் திங்கள்.

அரை, பாதி, எட்டு, பத்து என்னும் எண்ணுப் பெயர்ச்சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும்.
தொகு
அரைக்காசு,

பாதிப்பணம்,

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு.

5. உவமைத்தொகையில் வல்லினம் மிகும்.
எ.கா: 
மலர்க்கை,
தாமரைப்பாதம்.





Comments

Popular posts from this blog

தலைமை தாங்கும் தமிழ் - உவமைக் கவிஞர் சுரதா

புதுக்கவிதை வரலாறு

லளழ வேறுபாடுகள்